Saturday, October 25, 2008

Diwali here...

This is what has been planned... Let's see how things go... A potluck get-together among my college mates (Anna univ 2k4 passouts)

:-D

அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே...

வரும் தீபாவளித்திருநாளை முன்னிட்டு சியாட்டில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தங்கள் இல்லத்திற்கு வரும் ஞாயிறு (26 ஆம் தேதி) மதியம் ஒரு மணிக்கு உங்களை வருக வருக என வரவேற்கிறது... இந்த முறை நாம் அனைவரும் "அதிர்ஷ்டப்பானை" (அதானப்பா பாட் லக்) முறையில் தீபாவளியை கொண்டாட உத்தேசித்துள்ளோம்... ஆகையால் தாங்களும் தங்கள் துணைவி/துணைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சமீபத்தில் எங்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இருந்து முதியோர் சங்கத்தை சேர்ந்த திருமணமான மக்கள் தங்கள் திருமணப்புகைப்படங்களை எடுத்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மிரட்டப்படுகிறார்கள்.

அனைவரும் இந்திய பாரம்பரிய உடையில் வருவது அந்நாளை இன்னும் சிறப்பாக்கும் என்று எங்கள் சங்கம் நம்புகிறது...

கொசுறு: நாம் கொண்டாட இருக்கும் தினத்தில் தங்கத்தலைவி அசின் பிறந்தநாளும் இருப்பதால், சியாட்டில் அசின் ரசிகர் மன்றத்தின் தலைவர் மற்றும் ஒரே உரிப்பினருமான நரேஷ் நமக்கு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குவார். எங்கள் சங்கத்தின் மேற்கூறிய கோட்பாடுகளை மதிக்காதவர்களை அசின் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலய்யா நடித்த பயங்கர மொக்கையான ஒரு அட்டுப்படத்தை கட்டாயப்படுத்தி பார்க்க வைப்போம்.

தங்கள் வரவை எதிர்பார்க்கும்,
சியாட்டில் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

2 comments:

ஸ்ரீனிவாசன் said...

excellent invitation...still laughing !!!!!!!!


PS: hope u have a good time there :) Advance diwali wishes !!!!

Unknown said...

ya excelent yar... remembering those golden days..

Work from home India